மேலும் செய்திகள்
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
12-Aug-2024
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த பெலாந்துறையில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், அமைச்சர் கணேசன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.அரசு பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., சையது மஹ்மூத் தலைமை தாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனி துணை கலெக்டர் சங்கர், திட்டக்குடி தாசில்தார் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தனர். தி.மு.க., மாவட்ட பொறியாளர் அணி செம்பியன், வருவாய், ஊரக வளர்ச்சி, சமூக நலம், சுகாதாரம் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் பங்கேற்று, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி, அரசின் சாதனைகள் குறித்து பேசினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.முகாமில், கணபதிகுறிச்சி, முருகன்குடி, கிளிமங்கலம், மோசட்டை, கே.கே.நகர், பாசிக்குளம், கூடலுார் உட்பட 9 ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், திருத்தம், மருத்துவ காப்பீடு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
12-Aug-2024