உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிரிக்கெட் பயிற்சி நிறைவு விழா 

கிரிக்கெட் பயிற்சி நிறைவு விழா 

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த ஆண்டனி பப்ளிக் பள்ளியில், ரைசிங் ஸ்டார்  கிரிக்கெட் அகாடமி  சார்பில் நடந்த கோடைகால கிரிக்கெட் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, பள்ளி தாளாளர் லிடியா ஜார்ஜ் தலைமை தாங்கினார். கருவேப்பிலங்குறிச்சி இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். தலைமை பயிற்சியாளர் பது வரவேற்றார். இதில், செல்வகுமார், வெங்கடேஷ், பயிற்சி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் அரசு நன்றி கூறினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை