மேலும் செய்திகள்
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் விலங்கியல் மன்ற விழா
10-Jan-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எருமனுார் டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழுமம், சி.எஸ்.எம்., கல்லுாரியில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், சைபர் கிளப் துவக்க விழா நடந்தது.கல்வி குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) கவி பாண்டியன், பொருளளார் அருண்குமார், துணை முதல்வர் ஜேசுதாஸ் முன்னிலை வகித்தனர்.சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மணாவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்கினார். மேலும், சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.inகுறித்து விரிவாக விளக்கமளித்தார்.இதில், கலை அறிவியில் கல்லுாரி, பி.எட்., கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
10-Jan-2025