உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பத்தில் 28ம் தேதி கடையடைப்பு நடத்த முடிவு

நெல்லிக்குப்பத்தில் 28ம் தேதி கடையடைப்பு நடத்த முடிவு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் வர்த்தக சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.ம.ம.க., மாவட்ட தலைவர் ஷேக்தாவூத் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், வர்த்தக சங்க தலைவர் சம்சுதீன், செயலாளர் பிரபாகரன், கவுன்சிலர் இக்பால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நகராட்சியின் வரி உயர்வை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வரும் 25ம் தேதி தெருமுனை பிரசாரம் நடத்துவது, 28ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி