மேலும் செய்திகள்
கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்
4 hour(s) ago
இருண்டு கிடக்கும் சாலை
6 hour(s) ago
தில்லைக்காளி கோவிலில் காணிக்கை உண்டியல் திறப்பு
6 hour(s) ago
திட்டக்குடி: திட்டக்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திட்டக்குடி அடுத்த கூடலுார்குடிகாடு கிராமத்தில் அருகிலுள்ள தொளார்குடிகாடு கிராமத்தை இணைக்கும் இணைப்பு சாலை ரூ.11லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. முன்னதாக சாலையின் ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி துவங்கி நடக்கிறது. குடிநீர் பைப்லைன் செல்லும் பகுதியில், கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்நிலையில் நேற்று, இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago