உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பழுதான காவலர் குடியிருப்பு : சீரமைக்க எஸ்.பி., உத்தரவு

பழுதான காவலர் குடியிருப்பு : சீரமைக்க எஸ்.பி., உத்தரவு

விருத்தாசலம், : விருத்தாசலம் காவலர் குடியிருப்பில் பழுதடைந்த வீடுகளை உடனடியாக சீரமைக்க எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார்.விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கோப்புகள், போக்சோ உள்ளிட்ட வழக்குகளின் விபரம் குறித்து பார்வையிட்ட அவர், காவலர்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர், அருகிலுள்ள காவலர் குடியிருப்பில் உள்ள வீடுகளை பார்வையிட்டார். அதில், மேற்கூரை, சுவர்களில் விரிசல் விழுந்தும், சிமென்ட் காரைகள் பெயர்ந்தும் பழுதடைந்து காணப்பட்டது.இது தொடர்பாக பொதுப்பணித்துறை (கட்டடம்) உதவி பொறியாளரிடம் மொபைலில் பேசிய எஸ்.பி., ஜெயக்குமார் விரைவில் பழுதுநீக்கம் செய்ய உத்தரவிட்டார். அப்போது, 20 ஆண்டுகளுக்கு முன் குடியிருப்பு கட்டப்பட்டதால், புதிய குடியிருப்பு கோரி பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை