உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூரில் முதல்வருக்கு தி.மு.க., வினர் வரவேற்பு

வேப்பூரில் முதல்வருக்கு தி.மு.க., வினர் வரவேற்பு

வேப்பூர் : வேப்பூர் அருகே 'பெற்றோரை போற்றுவோம்' நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வரை கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்றனர்.வேப்பூர் அடுத்த திருப்பயரில் பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவருக்கு, தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் வேப்பூரில் வரவேற்பு அளித்தனர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், நல்லுார் தி.மு.க., ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினர். மங்களூர் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், தி.மு.க., விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், நல்லுார் முன்னாள் தெற்கு ஒன்றிய செயலர் அருணா கோதண்டபாணி, நல்லுார் தி.மு.க., இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் பாபு மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ