குடிநீர் டேங்குகள் கிளீனிங் அதிகாரிகள் ஆய்வு தேவை
கடலுார் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை மாதத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், பல ஊராட்சிகளில் பல ஆண்டுகளாக குடிநீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யாமல் உள்ளது.இதை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். மேல்நிலைநீர்தேக்க தொட்டிகளில் சுத்தம் செய்த நாள் மற்றும் சுத்தம் செய்த நாட்களை குறிக்க ஒன்றிய அதிகாரிகள் உத்திரவிட்டுள்ளனர். ஆனால் யாரும் அதை கண்டுகொள்வதில்லை.தற்போது ஊராட்சிகளில் நடக்கும் மோட்டார் சரி செய்வது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் உள்ளிட்ட பணிகள் நடக்கும்போது அதை ஜி.பி.எஸ்., மேப் கேமரா மூலம் போட்டோ எடுத்து அதிகாரிகள் பார்வைக்கு அனுப்பி வருகின்றனர்.ஆனால் குடிநீரால் தான் பொதுமக்களுக்கு அதிகளவு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்வதை போட்டோ எடுத்து அனுப்ப அதிகாரிகள் கேட்பதில்லை.எனவே, மேல்நிலைநீர்தேக்க தொட்டிகளை உள்ளாட்சி பிரமுகர்கள் மூலம்சுத்தம் செய்து, பொதுமக்களுக்கு நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.