மேலும் செய்திகள்
போலீசாருக்கு கண் பரிசோதனை முகாம்
09-Feb-2025
பெண்ணாடம்; பெண்ணாடத்தில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அபி கண் பரிசோதனை மையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.இதில், அபி கண்பரிசோதனை மைய நிறுவனர் வரலட்சுமி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவக்குழுவினர் கண்புரை, சதை வளர்ச்சி, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், தலைவலி, கண்ணில் நீர் அழுத்தம், கருவிழிப்புண் ஆகியன குறித்து பொது மக்களுக்கு பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். இதில், 20 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
09-Feb-2025