புத்தேரியில் கோ பூஜை
பெண்ணாடம்: ஆவணி மாத சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 6:30 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 7:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. 7:30 மணியளவில், கோவில் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட பசுவுக்கு கோ பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.