உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அங்காளம்மன் கோவிலில்  வரும் 27ல் மயானகொள்ளை  

அங்காளம்மன் கோவிலில்  வரும் 27ல் மயானகொள்ளை  

புவனகிரி; புவனகிரி அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை உற்சவம் வரும் 27ஆம் தேதி நடக்கிறது.புவனகிரியில் மிகவும் பழமை வாய்ந்த அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் மயான கொள்ளை உற்வசம் வெகு விமர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான மயானகொள்ளை விழா வரும் 25ம் தேதி கணபதி ஹோமத்துடன், கொடியேற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.தினசரி பல்வேறு நிகழ்ச்சிகளும் வரும் 27ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு மயான கொள்ளை நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்மன் வீதி உலா நடக்கிறது.தொடர்ந்து 2ம் தேதி தேர் புறப்பாடும், 5ம் தேதி அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரமும், 6ம் தேதி கும்ப பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ