ஹான்ஸ் விற்றவர் கைது
மந்தாரக்குப்பம்: ஊமங்கலத்தில் ஹான்ஸ் விற்ற பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.ஊமங்கலம் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசக்குழி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்வது தெரியவந்தது. இது சம்பந்தமாக பெட்டிக்கடை உரிமையாளர் ஜோசப் ஜெயராஜ், 43, என்பவரை போலீசார் கைது செய்து, அவர் மீது வழக்கு பதிந்தனர்.