உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண்ணதாசன் நுாற்றாண்டு விழா

கண்ணதாசன் நுாற்றாண்டு விழா

கடலுார்: கடலுாரில் மாநகர தமிழ்ச்சங்கம் சார்பில் கவிஞர் கண்ணதாசன் நுாற்றாண்டு துவக்க விழா நடந்தது.  சங்க தலைவர் சுதர்சனம் தலைமை தாங்கினார்.  பொருளாளர் ஆறுமுகம் வரவேற்றார். செயலாளர் நல்லதம்பி அறிமுக உரையாற்றினார். ஆகாஷ் பயிற்சி மைய நிர்வாகி ஆனந்த் வாழ்த்திப் பேசினார். கண்ணதாசன் படத்தை, வேலுமணி திறந்து வைத்தார். மாணவி சஞ்சனா, கண்ணதாசன் பாடல்களுக்கு நாட்டியமாடினார். ரமேஷ், சிங்காரம், கோகுலகண்ணன், கலைச்செல்வி பரசுராமன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.  தொடர்ந்து, சுழலும் சொற்போர் என்ற நிகழ்ச்சி நந்தகுமார் தலைமையில் நடந்தது. ‘கடவுளும் கண்ணதாசனும்’ என்ற தலைப்பில் சிவசங்கரி, ‘காதலும் கண்ணதாசனும்’ என்ற தலைப்பில் கவிமனோ, ‘தத்துவமும் கண்ணதாசனும்’ என்ற தலைப்பிலும் ஆதிசங்கரன் பேசினர்.  ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் காசிநாதன், பேச்சாளர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். மனோகரன் நன்றி கூறினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ