உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு கல்லுாரியில் சிம்பம் பயிற்சி துவக்க விழா 

அரசு கல்லுாரியில் சிம்பம் பயிற்சி துவக்க விழா 

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சிலம்பம் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார். கல்லுாரி இயக்குனர், உடற்கல்வி துறை சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் தற்காப்புக் கலை கலைஞர் சீனிவாசன் பேசினார். தமிழ்த் துறைத் தலைவர் சிற்றரசு வாழ்த்திப் பேசினார்.துறைத் தலைவர்கள் பூபாலன், செந்தில்குமார், தேவநாதன், நடராஜன், பேராசிரியர்கள் நாகராஜ், ராஜ்குமார், ராமச்சந்திரன், சுபாலட்சுமி, ஜோதி, யோகலட்சுமி உட்பட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.கல்லுாரியின் சிலம்பு பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட கலைச்செழியன் தலைமையில் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சிலம்ப தனித்திறன், அடிமுறை சிலம்பம், சுருள்வாள், மான் கொம்பு சுற்றுதல் போன்றவற்றை கல்லுாரி மாணவர்கள் முன் செய்து காண்பித்தனர். கல்லுாரி கலை பண்பாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் சுப்புலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி