மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை கண்டித்து நேற்று பரங்கிப்பேட்டையில், மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல பொறுப்பாளர் அசன் முகமது தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றிய குழு ஜெயசீலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தனசேகர், குளஞ்சியப்பன், விமலா, ஜீவா, கிளை செயலாளர்கள் கார்த்திகேயன், சந்தானராஜ், வெங்கடேசன், ராதாகிருஷ்ணன், வெண்ணிலா, துர்கா உட்பட பலர் பங்கேற்றனர்.