மேலும் செய்திகள்
சேத்தியாத்தோப்பில் 'பெட்டிஷன் மேளா'
02-Mar-2025
விருத்தாசலம் : விருத்தாசாலத்தில் போலீஸ் சார்பில் நடந்த பெட்டிஷன் மேளாவில் 75 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் நடந்த, போலீஸ் 'பெட்டிஷன் மேளா' நிகழ்ச்சிக்கு, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஜெயலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர்கள் பெண்ணாடம் பாக்கியராஜ், விருத்தாசலம் காந்தி, கருவேப்பிலங்குறிச்சி சங்கர், மங்கலம்பேட்டை ராஜ்குமார், ஆலடி சிவகாமி மற்றும் போலீசார் பொதுமக்கள் பங்கேற்றனர்.விருத்தாசலம் உட்கோட்டத்தை சேர்ந்த, விருத்தாசலம், அனைத்து மகளிர் காவல்நிலையம், பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி, மங்கலம்பேட்டை, ஆலடி, கம்மாபுரம் உள்ளிட்ட 7 போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் இருந்த பெட்டிஷன்கள் விசாரிக்கப்பட்டது. இதில், 75க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
02-Mar-2025