உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேத்தியாத்தோப்பில் பெட்டிஷன் மேளா

சேத்தியாத்தோப்பில் பெட்டிஷன் மேளா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு உட்கோட்ட போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம், ஒரத்துார், சோழத்தரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, புத்துார், அனைத்து மகளிர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கான, 'போலீஸ் பெட்டிஷன் மேளா' விஜயகணேசர் திருமண மண்டபத்தில் நடந்தது. டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் சேதுபதி உட்பட மற்ற போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் முன்னிலை வகித்தனர். கூடுதல் எஸ்.பி., கோடீஸ்வரன், பொதுமக்களின் புகார்களை விசாரித்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார். நேற்றைய பெட்டிஷன் மேளாவில் 100க்கும் மேற்பட்ட புகார்கள் விசாரிக்கப்பட்டு, 30 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை