உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பி.டி.ஓ.,வுக்கு பணி நிறைவு; பாராட்டு விழா

பி.டி.ஓ.,வுக்கு பணி நிறைவு; பாராட்டு விழா

ஸ்ரீமுஷ்ணம்;ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பாராட்டு விழா நடந்தது.விழாவிற்கு ஒன்றிய தனி அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ. (கிராம ஊராட்சி) செந்தில்வேல்முருகன் முன்னிலை வகித்தார். மேலாளர் பாலு வரவேற்றார். பணி ஓய்வு பெற்ற பி.டி.ஓ., பாலகிருஷ்ணனை அனைவரும் பாராட்டி பேசினர். உதவி பொறியாளர்கள் ஜெயச்சந்திரன், பாபுமனோகர், அனுஷாதேவி, மாணிக்க வாசகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், முத்துராஜா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ