மேலும் செய்திகள்
ஆதிவாலீஸ்வரர் கோவிலில் மகா பிரதோஷ பூஜை
19-Aug-2024
சனி பிரதோஷ பூஜை
02-Sep-2024
விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு மேல், 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பின்னர், அருகம்புல், வில்வம், அரளி மாலைகள் சாற்றி நந்தி பகவானுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், தே.கோபு ராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
19-Aug-2024
02-Sep-2024