உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேனர்

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேனர்

புவனகிரி:  புவனகிரி பேரூராட்சி சார்பில் மக்கள் கூடும் இடங்களில், திடக்கழிவு மேலாண்மை குறித்து படங்களுடன் காட்சிப்டுத்தும் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. புவனகிரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரங்கள் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, மருத்துவக்கழிவு இவற்றை தரம் பிரித்து வரும் நிலையில், பொதுமக்கள் குப்பைகளை தொட்டியில் போட வேண்டும். இப்பகுதியில் சேகரிக்கப்படும் இத்தகைய கழிவுகளை எவ்வாறு தரம் பிரிப்பது, அதனால் ஏற்படக்கூடிய நிலை குறித்த, செயல்களை விளக்குகின்ற வகையில், பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் டிஜிட்டல் பேனர் மூலம் காட்சிப்படுத் தியுள்ளனர். இது தற்போது  அப்பகுதி மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.    


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ