உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல் வயல்களில் சிலந்தி தாக்குதல் ஆய்வு 

நெல் வயல்களில் சிலந்தி தாக்குதல் ஆய்வு 

விருத்தாசலம்: கம்மாபுரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெல் வயல்களில் பரவியுள்ள சிலந்தி தாக்குதல் குறித்து ஆய்வு நடந்தது. விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் பகுதிகளில் விசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், குறுவை நெற்பயிற்களில் சிலந்தி தாக்குதல் அதிகமாக உள்ளது. இதையறிந்த கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை சிலந்திகள் ஆராய்ச்சி திட்டம் மற்றும் பூச்சியல் துறை பேராசிரியர் சுமதி, நெல் வயல்களை நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, நெல் பயிர்களில் தாக்கியுள்ள சிலந்திகளை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். அப்போது, உதவி பேராசிரியர் சிவராமன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி வேளாண் அலுவலர்கள் ராஜூ, காந்தி, ரமேஷ் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை