உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் கம்பி உரசியதால் வைக்கோல் எரிந்து சேதம்

மின் கம்பி உரசியதால் வைக்கோல் எரிந்து சேதம்

ஸ்ரீமுஷ்ணம் : டிராக்டரில் ஏற்றி வந்த வைக்கோல் மீது மின்கம்பி உரசியதால் தீ பிடித்து சேதமானது.சேத்தியாத்தோப்பு, மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 30; இவர், நேற்று ஸ்ரீமுஷ்ணம் அடுத்த எம்.பி.அக்ரஹாரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் 60 கட்டு வைக்கோல் வாங்கி தனது டிராக்டர் டிரெய்லரில் ஏற்றிக் கொண்டு ராங்கியம் கிராமத்திற்கு சென்றார்.ஸ்ரீமுஷ்ணம் - விருத்தாசலம் சாலையில் டிராக்டர் வந்த போது சாலையோரத்தில் உள்ள மின் கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் முழுதும் எரிந்து சேதமானது. ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ