துணை பி.டி.ஓ.,க்களுடன் சப் கலெக்டர் ஆலோசனை
விருத்தாசலம் : விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் துணை பி.டி.ஓ.,க்களுடன் சப் கலெக்டர் சரண்யா ஆலோசனை நடத்தினார்.விருத்தாசலம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, சப் கலெக்டர் சரண்யா தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் இப்ராஹிம், மோகனாம்பாள் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., மணிகண்டன் வரவேற்றார். விருத்தாசலம், மங்களூர், நல்லுார், ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில் ஒன்றியங்களை சேர்ந்த துணை பி.டி.ஓ.,க்கள் பங்கேற்றனர். அதில், ஒன்றியங்களில் நடந்து வரும் கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீடுகள், பிரதமர் வீடுகள் மற்றும் குடிநீர், சாலை, வடிகால் அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை, பணிகள் ஒதுக்கீடு ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட சப் கலெக்டர் சரண்யா அறிவுறுத்தினார்.ஒன்றிய சேர்மன் மலர்முருகன், சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சித் தலைவர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.