அரியகோஷ்டி அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 19 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் கந்தசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். கூடுதல் பள்ளி கட்டடத்தை பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், சுந்தரமூர்த்தி, மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, மாவட்ட துணை செயலாளர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், ரவி, முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், பேரூராட்சி கவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர், நிர்வாகிகள் சக்திவேல், சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.