உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி

வடலூர்: வடலுாரில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். வடலுார் நான்கு முனை சந்திப்பு பகுதி, வி.கே.டி., நெடுஞ்சாலை மற்றும், கடலுார்–சேலம் நெடுஞ்சாலை சந்திக்கும் இடமாக உள்ளது. இங்கு பள்ளி, கல்லுாரி, அலுவலக நேரங்களில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. பண்ருட்டி, சென்னை மார்க்கத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படாமல் ரயில்வே கேட் உள்ளதால் போக்குவரத்து தடைபடுகிறது. நேற்று பள்ளிகள் திறப்பு மற்றும் முகூர்த்த நாள் என்பதால் வாகன போக்குவரத்து இயல்பை விட அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக வடலுார்–பண்ருட்டி மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ரயில்வே மேம்பாலம் அமைப்பது, கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியில் நியமிப்பது உள்ளிட்டவை குறித்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி