சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரம்
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே ரூ.,5 கோடியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம் பகுதியில் ரயில்வே சார்பில், குறைந்த பயன்பாட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடலுார் துறைமுகம்–விருத்தாச்சலம் ரயில் மார்க்கத்தில், குள்ளஞ்சாவடி மற்றும் குறிஞ்சிப்பாடி ரயில் பாதையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. ஆயிக்குப்பம் வயல்வெளி பகுதிகளை கடலுார–் விருத்தாச்சலம் மெயின் ரோடுடன் இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைகிறது. இந்த குறைந்த பயன்பாட்டு சுரங்கப்பாதையில் ஆம்புலன்ஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் பயன்படுத்தும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம், ரூ.4.5 முதல், 5 கோடி மதிப்பில் திட்டம் துவங்கப்பட்டு முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது அடுத்த கட்ட பணிகள் விரைந்து நடந்து வருவதாகவும், மூன்று மாதத்தில் பணிகள் முழுமையாக முடிவடையும் என, திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.