உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.சி., செயற்குழு

வி.சி., செயற்குழு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வி.சி., கட்சியின் மைய மாவட்ட ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கினார். லோக்சபா தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மண்டல செயலாளர் ராஜ்குமார், துணை செயலாளர் அய்யாயிரம், மாவட்ட பொருளாளர் மருதமுத்து, தொகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், வெங்கடேசன், பாஸ்கர், பாலாஜி, குரு முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முருகன் வரவேற்றார்.மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் சிறப்புரையாற்றினார். வரும் 17ம் தேதி விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, வடலுார் பகுதிகளில் மது ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரசார பயணம் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகர பொருளாளர் தனசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை