உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே குடிநீர் வேண்டி காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.  விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேல் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால், கிராம மக்கள் குடிநீர் தேடி அலையும் அவலம் ஏற்பட்டது. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை. இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று  கிராமத்தில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள், போலீசார் யாரும் பேச்சுவார்த்தை வராததால் அவர்களாகவே கலைந்து சென்றனர். மேலும், உரிய நடவடிக்கை இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி