உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்ற 2பேர் கைது

குட்கா விற்ற 2பேர் கைது

பண்ருட்டி : பண்ருட்டி அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த ஒறையூர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புஷ்பராஜ், 28. இவர், மணம்தவிழ்ந்தபுத்துார் மெயின்ரோட்டில் பெட்டிக்கடை வைத்துள்ளார். அவரது கடையில், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கடையில் சோதனை நடத்தினர். அப்போது, 300 பாக்கெட் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஒறையூர், கொய்யாதோப்பு கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் அதியமான் (எ) பிரபாகரன்,36; என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாக புஷ்பராஜ் தெரிவித்தார். அதன்பேரில் பிரபாகரன் வீட்டில் சோதனை நடத்தினர்.அங்கு 750 பாக்கெட் ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 10 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து புஷ்பராஜ்,28; பிரபாகரன்,36; இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை