கோவிலில் திருட்டு 2 பேர் கைது
கடலுார்: கடலுார் அடுத்த புதுக்கடை பகுதியில் முத்தலாம்மன் கோவில் உள்ளது. கடந்த 22ம் தேதி, இக்கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த 4 கிராம் தாலி மற்றும் பித்தளை சரவிளக்கு, குத்து விளக்குகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். கோவில் நிர்வாகி முத்துபாபு கொடுத்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில், புதுக்கடையை சேர்ந்த பாஸ்கர் மகன் ஞானவேல் என்கிற ஷாம்,24,விழுப்புரம் வாழப்பட்டாம் பாளையத்தைச் சேர்ந்த வெங்கடாஜலபதி மகன் மதன்குமார்,23, இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் பேரில் இரவரையும் கைது செய்த போலீசார் அவர்களிமிருந்து 50ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நான்கு கிராம் தங்கத்தாலி, 2 பித்தளை சரவிளக்கு, 4 பித்தளைகுத்துவிளக்கு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.