உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் இரண்டு பேர், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதாக, பழைய வண்டிப்பாளையம் அஜய்,23 உள்ளிட்ட நால்வரை கடலுார் முதுநகர் போலீசார் கைது செய்தனர். அஜய் மீது கொலை, சாராய வழக்கு உள்ளது.தொழுதுார் கிராமத்தில் ஜன.3ம் தேதி, ரமேஷ் என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் பாண்டியன் என்பவரை ராமநத்தம் போலீசார் கைது செய்தனர். பாண்டியன் மீது ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரின் குற்றச்செயல்களை தடுக்கும்பொருட்டு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று, அஜய் மற்றும் பாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.இதற்கான உத்தரவு நகல் கடலுார் மத்தியசிறையில் உள்ள அஜய் மற்றும் பாண்டியனிடம் போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை