உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ., நிர்வாகிகள் 38 பேர் வீட்டு காவலில் வைப்பு

பா.ஜ., நிர்வாகிகள் 38 பேர் வீட்டு காவலில் வைப்பு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் 38 பேரை போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்கவோ, ஊர்வலங்கள் நடத்தவோ கோர்ட் தடை விதித்துள்ளது. தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகளை தமிழகம் முழுவதும் போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர். அந்த அடிப்படையில் கடலுார் மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் செல்ல திட்டமிட்ட பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் 38 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் வீட்டு காவலில் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை