உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேய்ச்சல் இடமாக மாறிய பள்ளி விளையாட்டு திடல்

மேய்ச்சல் இடமாக மாறிய பள்ளி விளையாட்டு திடல்

சேத்தியாத்தோப்பு ; சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் கிராமத்தில், அரசு மருத்துவமனை பின்புறம் பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு, கிராமப்புற இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் விளையாடி வந்தனர். இந்த மைதானம் பராமரிப்பின்றி, முட்புதர்கள் மண்டியும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இதனால் இளைஞர்கள், மாணவர்கள், மைதானத்திற்குள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தற்போது அப்பகுதியில் இப்பகுதியில் கால்நடைகள் மேய்ச்சல் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.எனவே மைதானத்தில் செம்மண் கிராவல் அடித்து புல்புதர்களை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை