உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடோனாக மாறிய பயணியர் நிழற்குடை

குடோனாக மாறிய பயணியர் நிழற்குடை

விருத்தாசலம்: சின்னபண்டாரங்குப்பம் கிராமத்தில் கீற்று குடோனாக மாறியுள்ள பயணியர் நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் அடுத்த சின்னபண்டாரங்குப்பத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல விருத்தாசலம்- ஆலடி சாலைக்கு தினசரி வந்து பஸ் ஏறிச் செல்வது வழக்கம்.இந்நிலையில் இந்த சாலையில் கிராம மக்கள் நலன் கருதி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், பயணியர் நிழற்குடை கட்டி திறக்கப்பட்டது. நிழற்குடை தற்போது கீற்று அடுக்கி வைக்கும் குடோனாக மாறியுள்ளது. இதனால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எனவே, கிராம மக்கள் நலன் கருதி, கீற்று அடுக்கி வைக்கும் குடோனாக மாறியுள்ள பயணியர் நிழற்குடையை, கிராம மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை