உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அபாகஸ் போட்டி 

 அபாகஸ் போட்டி 

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியில் அபாகஸ் போட்டி நடந்தது. பாடலீஸ்வரர் பள்ளியின் செயலாளர் நவநீதகிருஷ்ணன், அபாகஸ் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இமயவரம்பன், துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் கண்மணி முன்னிலை வகித்தனர். சென்னை வி.வி.சி.டி., மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் உமா, மணிமேகலை, கார்த்திகேயன், சத்தியபாமா, மலர்விழி, தீபிகா ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !