உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூடுதல் மருத்துவ கட்டடம்:  காட்சி பொருளான அவலம் 

கூடுதல் மருத்துவ கட்டடம்:  காட்சி பொருளான அவலம் 

பெண்ணாடம்:பெண்ணாடத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்சிப்பொருளாக உள்ள கூடுதல் கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை எழுந்துள்ளது. பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு இங்கு, 5 டாக்டர்கள், 5 செவிலியர்கள், 5 உதவியாளர்கள் உள்ளனர். சுகாதார நிலையத்தில் தினசரி, 100க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இங்கு, 7 படுக்கைகள் கொண்ட கர்ப்பிணி வார்டுகள் உள்ளன. சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான 24 மணி நேர பிரசவம், லேப் வசதி, குடும்ப கட்டுப்பாடு, அனைத்து வகை தடுப்பூசிகள், பள்ளி சிறார் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு ஊசி, மருந்து மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓமியோபதி சிகிச்சைக்கு தனியாக கட்டடம் உள்ளது. பாம்பு, தேள் போன்ற விஷக்கடிகளுக்கு அவசர சிகிச்சை, பல் மருத்துவம், பிசியோதெரபி மருத்துவம் பார்க்கப்படுகிறது. இங்கு எக்ஸ்ரே, ஸ்கேன் வசதி உள்ளன. போதிய கூடுதல் கட்டடம் இல்லை. இதனால் நோயாளிகளுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்தாண்டு 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் திறந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு வராததால் இடநெருக்கடி காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுவது தொடர்கிறது. அதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்சிப்பொருளாக உள்ள கூடுதல் மருத்துவ கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !