உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எடச்சித்துார் பள்ளியில் ஏ.ஐ., வகுப்பு துவக்கம்

எடச்சித்துார் பள்ளியில் ஏ.ஐ., வகுப்பு துவக்கம்

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஏ.ஐ., பயிற்சி வகுப்பு துவங்கியது. தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் அக்பர் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். மாவட்ட பயிற்சியாளர் ராமதிலகம் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் செயற்கை நுண்ணறிவு, கோடிங், ரோபோட்டிக்ஸ் மற்றும் இணைய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தார். அறிவியல் ஆசிரியர்கள் சந்தியா, ஜெயபாரதி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ