உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

சிதம்பரம்; சிதம்பரத்தில் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, புவனகிரி இளைஞர் அணி செயலாளர் செழியன் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லதா ராஜேந்திரன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஜெயபால் ஆகியோர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையில் அதிக உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட 5 ஊராட்சிகளுக்கான இக்கூட்டத்தில் நிர்வாகிகள் அன்பரசன், சுபாஷ் சந்திரபோஸ், பாலசுப்பிரமணியன், குமார், பிரேம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை