உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., பிரசாரம் எம்.எல்.ஏ., பங்கேற்பு

அ.தி.மு.க., பிரசாரம் எம்.எல்.ஏ., பங்கேற்பு

பரங்கிப்பேட்டை: -கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் பரங்கிப்பேட்டை அடுத்த பெரியப்பட்டில் திண்ணை பிரசாரம் நடந்தது. மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த் முன்னிலை வைத்தனர். பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சுதாகர் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பாண்டியன் எம்.எம்.ஏ., கடந்த அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். நி கழ்ச்சியில், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஜெ., பேரவை செயலாளர் சந்தர் ராமஜெயம், முன்னாள் ஊராட்சி துணை தலைவர் விஜயராஜா, நகர இளைஞரணி செயலாளர் சங்கர், முன்னாள் கவுன்சிலர்கள் அகிலநாயகி, ரவி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஹாஜா நஜிமுதின் சேட், ராஜா, கிளை செயலாளர்கள் கோபி , சேட் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ