உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் ஓட்டு சேகரிப்பு  

 அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் ஓட்டு சேகரிப்பு  

பண்ருட்டி: பண்ருட்டியில் அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் பங்கேற்று ஓட்டு சேகரித்தார். பண்ருட்டி, ரோட்டரி சங்க ஆளுநர் வருகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் சதாசிவம் தலைமை தாங்கினார். உதவி ஆளுநர் முருகேசன், செயலாளர் அருள்பிரகாசம், பொருளாளர் பழனிசாமி முன்னிலை வகித்தனர். ரோட்டரி ஆளுநர் லியோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னாள் தலைவர்கள் மதன்சந்த், ரவிசேகர், முத்துசுப்ரமணியம், கடந்த 26 ஆண்டுகள் தொடர்ந்து சேவை புரிந்தமைக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் முன்னாள் தலைவர்கள் சீனுவாசன், சண்முகம், வீரப்பன், காமராஜ், பாண்டு, ஏழுமலை, சிறப்பாக பணிபுரிந்த கிராம சுகாதார செவிலியர் லதா, தபால் துறை சேர்ந்த ஒட்டுநர் சேவையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் பங்கேற்று, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை