உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., நகர செயலாளர் நியமனம்

அ.தி.மு.க., நகர செயலாளர் நியமனம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அ.தி.மு.க., நகர செயலாளராக சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.நெல்லிக்குப்பம் அ.தி.மு.க., நகர செயலாளராக இருந்த காசிநாதன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தன்னை நியமனம் செய்த கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் பரிந்துரை செய்த மாவட்ட செயலாளர் சம்பத் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.தொடர்ந்து நேற்று, நெல்லிக்குப்பத்தில் உள்ள அண்ணாதுரை மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். அவைத் தலைவர் மனோகர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட இணைச் செயலாளர் கோபிநாத், மாவட்ட பிரதிநிதிகள் ராமசந்திரன், தமிழ்மாறன், சத்யபிரியா, முன்னாள் பொருளாளர் ரங்கராஜன்.வர்த்தக அணி பலராமன், அண்ணா தொழிற்சங்கம் பாபு, மணிகண்டன், மாணவரணி பஞ்சாபகேசன், மகளிரணி விஜயா, தனலட்சுமி, தொழிற்சங்க தலைவர் பன்னீர்செல்வம், கவுரி பாண்டியன், ஒன்றிய செயலாளர் நாகபூஷனம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை