உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அ.தி.மு.க., அலுவலக பூட்டை உடைத்ததால் பரபரப்பு

 அ.தி.மு.க., அலுவலக பூட்டை உடைத்ததால் பரபரப்பு

கடலுார்: கடலுார் அ.தி.மு.க., அலுவலகத்தின் பூட்டை உடைத்து, பழனிசாமி ஆதரவு புதிய நிர்வாகிகள் அலுவலகத்திற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க.,வில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக, கடலுார் வடக்கு மாவட்ட செயலராக இருந்த முன்னாள் அமைச்சர் சம்பத்தின் பதவியை பறித்து, அவரது சகோதரரான முன்னாள் அமைச்சர் தாமோதரனுக்கு மாவட்ட செயலர் பதவி வழங்கப்பட்டது. மேலும், புதிதாக கடலுார் மாநகர செயலராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். கார்த்திகேயன் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர், நேற்று அ.தி.மு.க., மாவட்ட அலுவலக பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின், அலுவலகத்தில் இருந்து வெளியேறிய அவர்கள், புதிய பூட்டு போட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை