உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அகில இந்திய நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

அகில இந்திய நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

கடலுார் : தாட்கோ, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து அகில இந்திய நுழைவுத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்திக்குறிப்பு:ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற சமூக மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு இலவச பயிற்சி வகுப்பை நடத்துகிறது. பயிற்சியில் சேர பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 65 சதவீதம். பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் www.tahdco.comஎன்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் சென்னை மணலி, பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லுாரியில் தங்கி பயிற்சி பெறலாம்.தங்கும் மாணவர்களுக்கு உணவு, தங்கும் இட வசதி மற்றும் 11 மாத பயிற்சிக்கான கட்டணத் தொகையை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வழங்குகிறது.கடந்த ஆண்டு தங்கி பயிற்சி பெற்ற 30 மாணவர்களில் 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை