மேலும் செய்திகள்
வள்ளிவிலாஸ் ஆலயா பள்ளி ஆண்டு விழா
02-Feb-2025
கடலுார்: அகில இந்திய ஓவியம் மற்றும் கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்ற நெல்லிக்குப்பம், வாழப்பட்டு வள்ளிவிலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவியை பள்ளி தாளாளர் பாராட்டினார்.ஆல் இன்டியா சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் சென்டர் சார்பில் நடந்த ஓவியம் மற்றும் கையெழுத்து போட்டி கடந்த ஜூலை மாதம் மஹாராஷ்டிராவில் நடந்தது. இப்போட்டியில் வள்ளிவிலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளி 7ம் வகுப்பு மாணவி ஹாஷினி கையெழுத்து போட்டியில் இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்து 7,000 ரூபாய்க்கான காசோலை, பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றார்.மேலும், 3ம் வகுப்பு மாணவர் ஜாரிப் அஹமது ஓவிய போட்டியில் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றார். வெற்றிபெற்ற இருவரையும் பள்ளி தாளாளர் இந்துமதி, பள்ளி முதல்வர் சீனுவாசன், உதவி தலைமையாசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு ஆகியோர் பாராட்டினர்.
02-Feb-2025