நத்தப்பட்டு ஊராட்சியில் அம்பேத்கர் பாடசாலை
கடலுார்; கடலுார் அடுத்த நத்தப்பட்டு ஊராட்சியில் அம்பேத்கர் பாடசாலையை, டாக்டர் பிரவீன் அய்யப்பன் துவக்கி வைத்தார்.அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, கடலுார் தொகுதி நத்தப்பட்டு ஊராட்சியில் அம்பேத்கர் பாடசாலை திறப்பு விழா நடந்தது. டாக்டர் பிரவீன் அய்யப்பன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி பாடசாலையை திறந்து வைத்தார். முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், தி.மு.க., ஒன்றிய துணைசெயலாளர்கள் மோகன், சக்திவேல், முருகன், முன்னணி நிர்வாகிகள் இடிமுரசு, சதீஷ்குமார், நிர்மல் மற்றும் விக்னேஷ், சித்தன், சுபாஷ், கிளைசெயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் கவுன்சிலர் ரவிராஜ், அருண் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.