மேலும் செய்திகள்
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
26-Oct-2024
திட்டக்குடி,: கோழியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.தொடர்ந்து, தீ விபத்து காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, தீயை அணைப்பது குறித்து போலி ஒத்திகை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, தீயணைப்புத்துறை சார்பில், பொது மக்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
26-Oct-2024