உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லட்சுமி சோரடியா பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு

லட்சுமி சோரடியா பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு

கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில், வேதிக் கணிதம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.சென்னை கிங்ஸ் அகாடமி மற்றும் கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி இணைந்து மாணவர்களுக்கு வேதிக் கணிதம் வகுப்பு நடத்தியது. இதில் நுாற்றுக்கு நுாறு மற்றும் 91 முதல் 99மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிங்ஸ் அகாடமியை சேர்ந்த ஜாகீர் உசைன், சாலமன் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா வரவேற்றார். வேதிக் கணிதம் ஆசிரியை மாதவி, பள்ளி தலைமைஆசிரியர் பத்தாகான், மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் சித்ரா விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ