மேலும் செய்திகள்
அரசு அலுவலர்கள் கூட்டம்
25-Nov-2024
கடலுார் : கடலுாரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க மாநில துணைத் தலைவருக்கு பாராட்டு விழா நடந்தது.கடலுார் மாவட்ட ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கத் தலைவர் கலியபெருமாள் மாநில துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.இவருக்கு கடலுாரில் பாராட்டு விழா நடந்தது. உலகத் திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், கலியபெருமாளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி வாழ்த்தினார்.ஆசிரியர் இஸ்ரேல், உறுப்பினர் குமார், ஆறுமுகம் வாழ்த்திப் பேசினர். விழாவில் மாவட்டத் துணைத் தலைவர்கள் நடராஜன் ரவிச்சந்திரன், செயலாளர் சண்முகம். பொருளாளர் முகுந்தன் பங்கேற்றனர்.
25-Nov-2024