உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆருத்ரா தரிசன பாதுகாப்பு ஆய்வு

ஆருத்ரா தரிசன பாதுகாப்பு ஆய்வு

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா பாதுகாப்பு குறித்து எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் விழாவில், தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. இன்று வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் நடக்கிறது.தேர் திருவிழா வரும் 12 ம் தேதியும், 13ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது.தேர் மற்றும் தரிசன விழா நாட்களில், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அதனையொட்டி கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். டி.எஸ்.பி., லாமேக், பொது தீட்சிதர்களிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ