உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அருணாச்சலா பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

 அருணாச்சலா பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி, அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளி, 10 ம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி அளவில் மாணவி சவுந்தர்யா 484 மதிப்பெண்கள்; மாணவி ஜியோஷிகா, மாணவர் நவீன்குமார் 475 மதிப்பெண்; மாணவி பவித்ரா 471 மதிப்பெண் பெற்றனர். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மாணவி சவுந்தர்யா, 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவர் நவீன்குமார் சமூக அறிவியலில் 99 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் மாணவர் நவீன்குமார், மாணவி ஆராதனா ஆகிய இருவரும், 97 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் மாணவி அனுசுயா 97 மதிப்பெண் பெற்றுள்ளார். பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம், செயலாளர் சட்டநாதன், நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன், இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் பிற இயக்குனர்கள் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பரிசு வழங்கி பாராட்டினர். முதல்வர் ஜோதிலிங்கம், ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், துணை முதல்வர் அபிராமி, ஆசிரியர்கள் மற்றும், பெற்றோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை